குடும்ப சுகாதார பணியகம் - தாய் சேய் சகாதாரம் பற்றிய தேசிய பணியகம்.
சுகாதார மற்றும் போசணை அமைச்சின் கீழுள்ள தாய் சேய் சுகாதாரம்‚ குடும்பத் திட்டமிடல் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றுக்கான நிலையம்‚ குடும்ப சுகாதார பணியகமாகும்.
1968 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனம் அன்று முதல் வருடத்திற்கு வருடம் ஒழுங்குக் கட்டமைப்பு‚ வலையமைப்பு மற்றும் தேசிய தேவைகளினை பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் போன்ற துறைகளில் பலமடைந்துள்ளது.
நாடளாவிய ரீதியிலும்‚ ஏழை வறியவர்கள் வாழும் தூர கஷ்டப் பிரதேசங்கள் வரையும் தாய் சேய் நிகழ்ச்சித் திட்டங்கள்‚ குடும்பத் திட்டமிடல் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றை விஸ்தரிப்பதில் இந்த பணியகமானது முக்கிய பொறுப்பு வகிக்கின்றது.
தாய் சேய் சுகாதார பிரிவின் மூலம் இலங்கை அடைந்துள்ள வளர்ச்சியானது சர்வதேச ரீதியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந் நிலையை அடைவதற்காக குடும்ப சுகாதார பணியகமானது அதன் ஆரம்பம் முதலே அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளது.
இந்த வெற்றியினை அடைந்து கொள்வதற்காக அர்ப்பணித்துச் செயலாற்றிய அனைவருக்கும் பணிப்பாளர் என்ற வகையில் நன்றிகூறுவதற்கு நான் இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்கின்றேன்.
எமது நிறுவனத்திற்கு நீண்ட காலமாக இணையத்தளம் ஒன்றின் தேவை இருந்து வந்தது. அதனால் தாய் சேய் சுகாதாரம் மற்றும் குடும்பத் திட்டமிடல் நிகழ்ச்சித் திட்டங்களின் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் இதை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
எமது சேவைகள் மேலும் விரிவடைந்தும் விஸ்தரித்தும் காணப்படல் வேண்டுமென்பதே எமது நம்பிக்கையாகும். எனவே எமது இணையத் தளத்திற்குள் நுழைந்து தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
பணிப்பாளர்.
தாய் சேய் சுகாதாரம்.
Dr. Deepthi Chandrika Perera |