சேவைகள்
   
 
  குடும்ப சுகாதார சேவை  
 
 


முந்திய 1970 இல் இருந்து தாய், சேய் சுகாதார சேவை வழங்கலானது முழு சுகாதார சேவையில் மிகவும் முக்கிய பங்கை வகித்துக்கொண்டு வருகின்றது. இதுவானது சுகாதார உட்கட்டமைப்பினை இன்னும் வலுவடையச் செய்து மிகவும் திறமையானதும் குடும்பச் சுகாதார சேவைகளை நாடு பூராகவும் வழங்குவதற்கும் உதவியுள்ளது.

சுகாதாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய அம்சங்களில் ஒன்று. குடும்பச் சுகாதார சுகாதாரமானது தேசிய மற்றும் மாகாண சுகாதார அமைப்பினூடாக ஒருங்கிணைத்துக் கொடுக்கப்படுகின்றது.

தேசிய அளவில் குடும்பச் சுகாதார பணிப்பகமானது திட்டமிடல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் தாய், சேய் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு நிகழ்ச்சிகளை பரிசிலணை செய்தல் போன்றவற்றினூடாக முழு நாட்டுக்கும் வழங்குவதில் மத்திய பங்கினை வகிக்கின்றது.

மாகாண மட்டத்தில், மாகாண சுகாதார சேவைகள் அதிகாரி (PDHS) சுகாதார அதிகாரி ஆவார். இவருக்கு உதவும் வகையில் பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள் அவர்களுக்குரிய பிராந்தியங்களுக்கு (மாவட்டங்களுக்கு) பொறுப்பதிகாரிகளாக இருப்பார்கள். பிராந்திய சுகாதார சேவைகள அதிகாரி ஆனவர் தொழிநுட்ப அதிகாரிகளுக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் பொறுப்பானவராக இருப்பார். தை்திய அதிகாரி/தாய் - சேய் சுகாதாரம், பிராந்திய Epidemiologist (RE), மேற்பார்வை செய்யும் பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேச ((SPHID), பிராந்திய மேற்பார்வை செய்யும் பொதுச் சுகாதார தாதி, சுகாதார கல்வி அதிகாரிகள் 1- 3 (HEO), பிராந்திய பல் வைத்தியர்கள் புள்ளிவிபர ஆய்வு (Statistical Survey) அதிகாரிகள் (SSO), மற்றும் நிகழ்ச்சிசகள் திட்டமிடல் அதிகாரிகள் ஆகியோர் தொழிநுட்ப குழாமில் அடங்குவார். வைத்திய அதிகாரி / தாய், சேய் சுகாதாரம் ஆனவர் தாய் சேய் சுகாதார சேவைகள் அவர்களுக்குரிய பிராந்தியத்தில் (மாவட்டத்தில்) திட்டமிடல் மற்றும் மேற்பார்வை செய்பவராக இருப்பார்.

இச் சேவைகள் அப்பிராந்தியத்தில் வைத்திய ஸ்தாபனங்கள் மற்றும் சுகாதார அலகுகளின் வலையமைப்பினூடாக வழங்கப்படுகின்றது. ஒரு மாவட்டத்தில் (பிராந்தியத்தில்) 07 முதல் 20 வரையிலான வைத்திய சுகாதார அதிகாரிகளுக்குரிய பிராந்தியங்கள் உள்ளடங்கும். இதுவே அப்பிராந்தியத்தில் மிகச் சிறிய சுகாதார அலகு ஆகும். மற்றும் இதற்கு சுகாதார வைத்திய அதிகாரி பொறுப்புதாரியாவார்.

சுகாதார வைத்திய அதிகாரிக்கு உதவுவதற்காக பொதுச் சுகாதார நபர்கள் உள்ளனர். பொதுச்சுகாதார தாதியர்
, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை செய்யும் பொதுச்சுகாதார மருத்துவிச்சிகள் (midwive) மற்றும் பொதுச் சுகாதார மருத்துவிச்சிகள் (midwives) ஆகியோர் இந்த பொதுச் சுகாதார குழாமில் உள்ளனர்.

பொதுச் சுகாதார மருத்துவிச்சிகள்
(midwives) ஒரு சமூகத்தில் தாய், சேய் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று சுகாதார சேவைகளை வழங்குவதில் முன்னிலை சேவை வழங்குபவராக உள்ளார். பொதுச் சுகாதார மருத்துவிச்சிகள் (midwives) இன் சேவைக்கு நன்கு எல்லை வரையறுக்கப்பட்டதும், மக்கள் தொகை 2000 முதல் 5000 வரை கொண்டதுமான பிராந்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான வீட்டுத் தரிசனம் மூலம் அவர், கற்பிணித்தாய்மார், Newborns, infants, மற்றும் பாடசாலைகளுக்கு செல்ல இருக்கும் பிள்ளைகளுக்கு சேவைகளை வழங்குவதோடு, அவருக்குரித்தான எல்லையில் தகுதியானவர்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டுச் சேவைகளையும் வழங்குகிறார். அவர் சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சம்பந்தமான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்குவதோடு முக்கியமான குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான புத்திமதிகளையும் தகுதியான நபர்களுக்கு வழங்குகிறார். அத்தோடு அவர் அவரின் எல்லைக்குட்பட்டோருக்கு குடும்பக் கட்டுப்பாட்டு உதிரிகளை (மாத்திரைகள், ஆணுறைகள்) வழங்குவதோடு, அவர்களை தொடர்ந்து முறையாக பின்தொடர்ந்து வருகிறார்.

அத்தோடு அவர் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பெண்ணியல் நல சிகிச்சை நிலையத்துக்கு தரிசிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு அவர்களை பின்தொடர்வதன் மூலம் அவர்கள் அச்சிகிச்சை நிலையத்துக்கு ஒழுங்காக வருகை தருகிறார்களர என்பதை உறுதிப்படுத்தவும் செய்வார். அவரது வீடு வீடாகச் சென்று வழங்கும் சேவைகளுக்கு மேலதிகமாக அவர் சமூகத்தை சுகாதார சேவைகள் செயற்றிட்டத்துடன் ஒருங்கிணைத்தல் முயற்சியிலும் பங்கெடுப்பார். இந்த செயற்றிட்டத்தினூடாக நன்றாக அபிவிருத்தியடைந்ததும் பயனுள்ளதுமான
, தடுக்கப்படவேண்டியதும், முன்னெடுக்கப்படவேண்டியதுமான தாய் - சேய் நல மருத்துவத்தை பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றது. மற்றும் இச்செயற்றிட்டமானது மற்றைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பின்பற்றக்கூடிய ஓர் உதாரமாக உள்ளது.

 
 
     
 

குடும்ப சுகாதார சேவைகள் வழங்களின் நோக்கங்களாவன
 
   
1. கர்ப்பகாலத்தில்‚ பிரசவத்தின்போது மற்றும் பிரசவத்தின் பின் தேவையான பாதுகாப்புகளை உறுதி செய்தல்.
2. பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக முதல் மாதத்தினுள் பெற்றுக் கொடுக்க வேண்டிய பாதுகாப்புகளை மிகவும் சிறந்த முறையில் பேணி வருவதற்கு.
3. குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான தேக ஆரோக்கியம்‚ புத்திக் கூர்மை மற்றும் மனித சமூக ரீதியான அனைத்து மட்டங்களிலுமான விருத்தி மற்றும் அபிவிருத்தியை அடைவதற்குத் தேவையான உரிய நிலையை அடைவதற்கு துணைபுரிதல்.
4. வழங்கப்பட்டுள்ள கல்வி வாய்ப்புகளின் மூலம் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்கு இயன்ற வகையில் பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துதல்‚ அவர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தேக ஆரோக்கியமான சுகாதார முறைமையினை அறிமுகம் செய்தல்.
5. விசேட தேவைகள் மற்றும் சிறிய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சமூகத்தின் சிறந்த நபர்களாக செயற்படுத்துவதற்கு தேவையான மானசீக‚ தேக மற்றும் சமூக ரீதியான ஆற்றல்களைப் பெற்றுக் கொடுத்தல்.
6. இளைஞர்களின் சுகாதாரம் மற்றும் தேகாரோக்கியத்தை மேம்படுத்தல்.
7. குடும்பக் கட்டுப்பாட்டுத் தேவையுள்ள குடும்பங்களுக்கு தேவையான வசதகளை வழங்குதல் மற்றும் இளம் செழிப்புத் தன்மை பிரச்சினையாகவுள்ள குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகள்‚ வழிகாட்டல்களை மேற்கொள்ளல்.
8. பெண்களின் முக்கிய தேவைகள் தொடர்பாக செயற்படல். (ஒரு சிலரின் நோய்த்தன்மைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளல்‚ வெளிநாடுகளுக்குச் செல்லும் மற்றும் அவர்களின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் சுகாதார தேவைகள் பற்றி கவனம் செலுத்துதல்.
9. ஆண்‚ பெண் சமூகத்தன்மையினை பெற்றுக் கொள்வதற்கு துணைபுரியும் ஒரு சூழலை உருவாக்குதல்.
10.

தாய் சேய் சுகாதார நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிடல்‚ நடைமுறைப்படுத்துதல்‚ மீளாய்வு செய்தல்‚ மதிப்பீடு செய்தல் என்பன தொடர்பான தேவையான கொள்கைகளை தயாரித்து‚ தேவையான சமகால தகவல்கள் மற்றும் சான்றுகளை எந்நேரமும் பெற்றுக் கொடுத்தல்.

   
கர்ப்ப காலத்தினுள்‚ பிரசவத்தின்போது‚ பிரசவத்திற்குப் பிற்பட்ட
காலத்தில் தேவையான உபசரணையை உறுதி செய்தல்.
1. பிரசவத்திற்கு முன்னான பாதுகாப்பு பற்றிய அறிவினைப் பெற்றுக் கொடுத்தல்.
2. இல்லத்திலும் மற்றும் நிறுவன ரீதியில் தரம் வாய்ந்த தாய்மார் பாதுகாப்பினைப் பெற்றுக் கொடுத்தல்.
3. கர்ப்ப மற்றும் பிரசவத்தின் பின்னரான தாய்மார்களின் போஷாக்கு நிலையினை உயர்த்துதல்.
4. பிரசவத்தின்போது பயிற்சி பெற்ற உதவியையும் மற்றும் உரிய சுற்றுச் சூழல்களையும் உறுதி செய்தல்.  
5. ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்தின் கீழ் அவசர பிரசவ பாதுகாப்பு சேவையினை பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்தல்.  
6. வீடுகளுக்குச் செல்வதற்கு முன்னர் பிரசவத்தி்ன் பி்ன்னான நல்ல தன்மையை முன்னேற்றுதல்.  
7. முன் பிரசவம்‚ பிரசவத்தின் பின் நோய்த்தன்மைகளுக்காக அதற்குரிய (விசாரணை) முறைமை ஒன்றினை நடைமுறைப்படுத்தல்.  
8. தாய்மார் மரண விசாரணையை பலப்படுத்தல்.  
9. தாய்மார் சுகாதார பாதுகாப்பின்போது கணவரின் பங்களிப்பினை உறுதி செய்தல்.  
  குழந்தைகளுக்கு முக்கியமாக முதல் மாதத்தினுள் பெற்றக் கொடுக்கப்படும் உபசரணைகளை மிகவும் சிறந்த முறையில் பேணி வருதல்.
 
1. குழந்தைகளின் பாதுகாப்பு கொள்கைகளை விருத்தி
செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு உதவுதல்.
2. நாட்டினுள் குழந்தைகளின் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கான
வழிமுறை ஒன்றினை தயாரித்தல்.
3. குழந்தைகளின் பாதுகாப்பு சேவை‚ முகாமைத்துவம் என்பவற்றுக்கான
ஆலோசனை முறைகளை அறிமுகம் செய்தல்.
4. நாடளாவிய ரீதியில் தாய்ப்பால் ஊட்டுவது பற்றி தாய்மார்களை
தூண்டுதல் மற்றும் குழந்தையின் அந்த உரிமையினை உறுதி செய்தல்.
5. குழந்தை நட்பு மருத்துவ மனைகளை ஸ்தாபித்து நடைமுறைப்படுத்தல். மற்றும் கண்காணித்தல்.  
6. தாய்ப்பாலுக்கு பதிலாக பிற பதிலீடுகளை விற்பனை செய்வதினை கட்டுப்படுத்தும் இலங்கை கட்டளைச் சட்டத்தின் நடவடிக்கைகள் பற்றிய ஒருங்கிணைப்பு.  
7. குழந்தை சுகாதாரம் மற்றும் குழந்தை பாதுகாப்பு சேவையினை நாட்டினுள் கண்காணித்தல்‚ மற்றும் மதிப்பீடு செய்தல்.  
8. ீநச ையேவயட நோய் நிலை மற்றும் மரணம் பற்றி விசாரணை செய்தல்.  
9. குழந்தை பாதுகாப்பு பற்றிய நிபுணத்துவ அறிவை பெற்றுக் கொடுப்பதனை உறுதி செய்தல்.  
10. குழந்தை சுகாதரத்தினை மேம்படுத்துவதற்காக கல்விசார் வெளியீடுகளை பிரசுரித்தல்.  
11. குழந்தை சுகாதார பாதுகாப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் மாகாண ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் தேசிய மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்தல்.  
12. குழந்தைகளில் சுகாதார பாதுகாப்பு சேவையின் நற்தன்மையினை மேம்படுத்துவதற்காக புதிதாக பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பிற்குத் தேவையான உபகரணங்களை வெளிநாட்டு உதவி வழங்கும் அமைப்புக்களின் ஊடாக பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தல்.  
13. பிறந்த குழந்தைகளின் சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பாக அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைப்பு செய்தல்.  
     
 

 
சிறுவர்களுக்கு உயிர் வாழ்வதற்கு உடல்நலன்‚ அறிவு மற்றும் மன அமைதி என்ற அனைத்து துறைகளிலும் விருத்தி மற்றும் அபிவிருத்தியை அடையக்கூடிய உச்ச நிலையை அடைவதற்கு துணை புரிதல்.
1. அனைத்து குழந்தைகளுக்கும்‚ பிள்ளைகளுக்கும் வீட்டிலும் சிகிச்சை நிலையங்களிலும் தரமான சேவையொன்றினைப் பெற்றுக் கொடுத்தல்.
2. அனைத்து குழந்தைகளுக்கும்‚ பிள்ளைகளுக்கும் உரிய வயதில் தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொடுப்பதினை உறுதி செய்தல்.
3. குழந்தைகள்‚ முன்பள்ளி சிறார்களுக்கு சிறு பராயத்தில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்த்தன்மைகளுக்கு பொருத்தமான சிகிச்சையை பெற்றுக் கொடுத்தல்.
4. குழந்தைகள்‚ முன்பள்ளி பிள்ளைகளிடையே நோய் மற்றும் இறப்பு பற்றிய விசாரணை செய்யும் நிகழ்ச்சித் திட்டமொன்றை உருவாக்குதல்.
5. குழந்தைகள்‚ சிறுவர்களுக்கு முற்பட்ட காலத்தில் பொருத்தமான உணவு முறைகளை அறிமுகஞ் செய்தல்.
6. விஷேட கவனஞ் செலுத்த வேண்டிய குழந்தைகள்‚ சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் மேலதிக உணவினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் விருத்தியை அதிகரிக்கச் செய்தல் மற்றும் அதிக கவனம் செலுத்துதல்.
7. சிறுவர்களின் உளரீதியான உச்ச சமூக வளர்ச்சிக்காக செயற்பாட்டு ரீதியில் தலையிடல்.
 

 
வழங்கப்பட்டுள்ள கல்வி வாய்ப்புக்களின் மூலம் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பாடசாலை சிறுவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை அறிமுகஞ் செய்தல்.
1. எல்லர சந்தர்ப்பங்களிலும் சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளிடையேஇ ஏனைய சம்பந்தப்பட்ட துறைகளின் பங்களிப்பை பலப்பத்தல்.
2. பாடசாலை அதிபர்கள்‚ ஆசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்துக் கொண்டு பாடசாலை மருத்துவப் பரிசோதனையின் தரத்தையும் செயற்பரப்பையும் ( உழஎநசயபந) விருத்தி செய்தல்.
3. பாடசாலையினுள் இனப்பெருக்க சுகாதாரக் கல்வியைப் பலப்பத்தல்.
4. பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை அறிமுகஞ் செய்தல்.
5. பாடசாலை பிள்ளைகளின் போஷாக்கு நிலையை விருத்தி செய்தல்.  
6. கற்பதற்கு உகந்த விதத்திலான உயர் வசதிகளைக் கொண்ட மன அமைதியான சூழலொன்றை கட்டியெழுப்புதல்.  
7. சுகாதார மற்றும் கல்வி பணியாட் தொகுதியின் வசதிகளை அதிகரிப்பதன் மூலம் பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலையினை உயர்த்துதல்.  
 

 
விஷேட தேவையுள்ள மற்றும் சிறு குறைபாடுகளுள்ள குழந்தைகளுக்கு சமூகத்தில் பயன் வாய்ந்தவர்களாக செயற்படுவதற்கு தேவையான உடல்‚ உள மற்றும் சமூக ரீதியான ஆற்றல்களைப் பெற்றுக் கொடுத்தல்.
1. விஷேட தேவையுள்ள பிள்ளைகள்‚ சிறு குறைபாடுகளுள்ள குழந்தைகளுக்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
2. இதை அடிப்படையாகக் கொண்ட தற்போது நடைமுறையிலுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை இனங்காணல்‚ தேடிப் பார்ப்பதற்காக பல்தரப்பு இயந்திரமொன்றை தயாரித்தல்.
3. சிறு குறைபாடுடைய பிள்ளைகள் மற்றும் விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கான நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதற்காக அனைத்துப் பிரிவுகளிலுமுள்ள சுகாதாரப் பணியாளர்களினதும் ஆற்றலை விருத்தி செய்தல்.
  புதிய இளம் பராய குழந்தைகளின் சுகாதாரம் ‚ சிறந்த வாழ்க்கை முறை என்பவற்றை விருத்தி செய்தல்.
 
1. புதிய இளம் பராயத்தினரின் வாழ்க்கைத் திறனை விருத்தி செய்தல்.
2. நாடளாவிய ரீதியில் புதிய இளைஞர் நட்பு சுகாதார சேவையொன்றை ஆரம்பித்தல்.
3. புதிய இளம் வயதையுடையவர்களின் சுகாதார நிலையினை உயர்த்தும் பொருட்டு சுகாதார பணியாட் தொகுதியினருக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.
4. புதிய இளம் வயதினரின் சுகாதாரத்திற்காக பல்வேறு மட்டத்திலான பங்குதாரர்களினால் சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட வலையமைப்பொன்றை ஏற்படுத்துதல்.
5. இளைஞர்களின் சுகாதாரத்தில் நேர் முன்னேற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு துணைபுரியும் பெற்றோர்களின் ஆற்றல்களை விருத்தி செய்தல்.  
6. உணவு மற்றும் உடல் ரீதியான செயற்பாடுகள் உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை பழக்குதல் மற்றும் ர்ஐஏ ஃ யுஐனுளு மற்றும் ஏனைய சமூக நோய்கள் பற்றி தெளிவுபடுத்தி அவற்றிலிருந்து பாதுகாப்பு பெற உதவுதல்.  
 

 
குடும்பத் திட்டமிடல் தேவையுள்ள குடும்பங்களுக்கு அவற்றை செய்து கொடுத்தல் மற்றும் மலட்டுத் தன்மை பிரச்சினையாகக் காணப்படும் குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றை வழங்குதல்.
1. தரம் வாய்ந்த குடும்பத் திட்டமிடல் சேவையொன்றினை பேணிவருதல் மற்றும் இலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடியதை உறுதி செய்தல்.
2. ஆண் அல்லது பெண் கருவளக் கேடு பற்றிய சேவைகளை நடாத்துவதனை உறுதி செய்தல்.
3. சமூகத்தில் குடும்பத் திட்டமிடல் முறைகளைப் பயன்படுத்தாத போதிலும் பயன்படுத்தும் தேவையுடையவர்கள் பற்றி கவனம் செலுத்துதல்.
4. இனப் பெருக்க சுகாதார உபகரணங்கள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பு தன்மையினை உறுதி செய்தல்‚ .........................வழங்கல் முகாமைத்துவ தகவல் முறைமையை பலப்படுத்தல்.
5. மருத்துவ ஆலோசனையின் படி கருத்தரிக்க கூடாத தாய்மார்களுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு ஆலோசனை சேவைகளை நடாத்துதல்.
6. கருச் சிதைவுக்குப் பின்னர் ஆலோசனை சேவைகளை வழங்குதல்.

 
பெண்களின் விஷேட தேவைகள் பற்றி கவனஞ் செலுத்துதல் ( சில நோய் நிலைகள் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ளல் போன்ற)‚ வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களினதும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுடன் சம்பந்தப்பட்ட சுகாதார தேவைகள் பற்றி நடவடிக்கை எடுத்தல்.
   
1. நாட்டின் சகல பிரதேசங்களும் உள்ளடக்கப்படும் விதத்தில் தரம் வாய்ந்த சுக வனிதர் சிகிச்சை சேவையொன்றை நடாத்துதல்.  
2. சுக வனிதர் சிகிச்சையின்போது இனங்காணப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளையுடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவமனையினுள் விஷேட சேவை அலகொன்றை நிறுவுதல்.
3. நிறுவனசார் மருத்துவப் பரிசோதனை அறைகளில் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்களை இனங்காணும் சேவைகளிற்கு வலுவூட்டல்.
4. வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள‚் அவர்களின் குடும்ப நலன் கருதி இணைந்த இயந்திரமொன்றை ஒழுங்கு செய்தல்.
5. தொழில் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்‚ அவர்களின் தாய் சேய் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல்.
  ஆண் பெண் சமூகத் தன்மையினை அடைந்துகொள்வதற்குத் துணைபுரியும் சூழலினை அமைத்தல்.
   
1. தாய் சேய் சுகாதாரம் தொடர்பான ஆண் பெண் சமூகத் தன்மையினை மேம்படுத்துவதற்கான இயந்திரமொன்றை ஒழுங்கு செய்தல்.

2. சுகாதார பணியாட் தொகுதியின் நிறுவனம்சார் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களின்போது ஆண் பெண் சமூகத் தன்மையினை கட்டியெழுப்புவதை உறுதிசெய்தல்.
3. நிவாரண மற்றும் உபசரணை சேவைகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்களிடையே ஆண் பெண் சமூகத் தன்மை தொடர்பாக அறிவூட்டல் மற்றும் அவர்களின் தரங்களுக்கு ஏற்ற முறையில் இந்த பணிக்கான ஆற்றல்களை முன்னேற்றுதல்.
   

 

 
தாய் சேய் சுகாதார நிகழ்ச்சித் திட்டங்களை தயாரித்தல்‚ செயற்படுத்தல்‚ கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு தொடர்பில் கொள்கைத் தயாரிப்புக்குத் தேவையான நடைமுறைத் தகவல்கள் மற்றும் சான்றாதாரங்களை தொடர்ச்சியாக வழங்குதல்.
1. காலத்திற்கு காலம் தாய் சேய் சுகாதாரத் தகவல்கள் முறைமை நடைமுறைப்படுத்தப்படுவத பற்றிய மீளாய்வு மற்றும் திருத்தங்கள்.
2. தாய் சேய் சுகாதார தகவல் முறைமையானது எல்லர மட்டங்களிலும் பயன்படுத்தப்படுவதனை உறுதி செய்தல் மற்றும் காலத்திற்கு காலம் முன்னேற்ற அறிக்கைகளை பெற்றுக் கொடுத்தல்.
3. தாய் சேய் சுகாதார கொள்கை தயாரிப்பின்போது மற்றும் நிகழ்ச்சித் திட்ட முகாமைத்துவத்தின்போது தகவல்களை அடிப்படையாகக் கொள்ளும் தெவையினைக் கட்டியெழுப்புதல்.
4. தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பில் மருத்தவமனைகளில் தற்போது காணப்படும் தகவல் முறைமையை விருத்தி செய்தல்.
 
 

குடும்ப சுகாதார பணியகத்தினுாடாக வழங்கப்படும் சிகிச்சையளிப்பு சேவைகள்
 
  குடும்பத் திட்டமிடல் சிகிச்சை
  மலட்டுத் தன்மைக்கான சிகிச்சை
  சு வனிதையர் சிகிச்சை
  தடுப்பு மருந்து சிகிச்சை
 

ஆலோசனைகள்‚ தற்காலிக குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை வழங்குதல் அதாவது விழுங்கும் மாத்திரைகள் (ழுஊீ) ஊசியேற்றல் (னுஆீயு) ஹோமோனை உட்செலுத்துதல் ( ஐருஊனு) ஆணுறைப் பாவனை(ஊழனெழஅள) அனைத்து வார நாட்களிலும் ஐருஊனு‚ விழுங்கும் மாத்திரைகள் (ழுஊீ) ஆணுறைப் பாவனை என்பன பற்றிய சேவைகள்
புதன் பி.ப 1.00 மணிக்கு ( ஐஅிடயழெ ெ) ஹோமோனை உட்செலுத்துதல்.
 

ஆண் பெண் இருபாலாருக்கும் நிரந்தரஃமகப்பேறில்லாத முறைகளை வழங்குதல்‚ அதாவது பெண்களுக்கு லெபரஸ்கோப் கருவளக் கேடு மற்றும் ஸ்கெப்பல் சத்திர சிகிச்சை தினங்கள் : திங்கள்‚ செவ்வாய்‚ வியாழன்
மற்றும் வெள்ளி நாட்களில்; மு.ப . 8.30 மணிக்கு.
 

குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் சுக வனிதர் சிகிச்சை சேவைகள் பற்றி சுகாதார நபர்களை பயிற்றுவித்தல்.
 

சுக வனிதர் சிகிச்சையின் போது ஆரம்ப புற்றுநோய் தன்மைகள் மற்றும் தொற்றாத நோய்கள் என்பவற்றை முன்கூட்டியே அல்லது உரிய காலத்தில் இனங்காணல்.
சுக வனிதர் சிகிச்சை செவ்வாய் பி.ப . 2.00 மணிக்கு இடம்பெறும்.
 

கழுத்தின் முன் புற்றுநோய் காயங்கள் பற்றிய கொல்பொஸ்கொபி பரிசோதனை‚ அதற்கு சிகிச்சையளித்தல்.
கொல்பொஸ்கொபி பரிசோதனை செவ்வாய் பி.ப. 1.00 மணிக்கு
 

பயன்தராத சோடிகளுக்கான வழிகாட்டல்கள்‚ சிகிச்சையளிப்பு‚ பயன்தராதவர்களுக்கான சிகிச்சை புதன் மு.ப. 9.00 மணிக்கு
 

தேசிய அட்டவணைப்படுத்தலுக்கு ஏற்ப தடுப்பு மருந்து – வாரம் தோறும் சிகிச்சையானது வியாழக்கிழமை
நாட்களில் பி.ப.2.00 மணிக்கு இடம்பெறும்.
   
குடும்பத் திட்டமிடல் முறைகளின் பாவனை பற்றிய சகல பிரச்சினைகளுக்கும் பதிலளிப்பதற்கு துணைவழியொன்று உள்ளது. இந்த சேவையானது குடும்பத் திட்டமிடல் சேவைகளை வழங்கும் சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கும்‚ அரசாங்க மருத்துவமனைகளின் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கும் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பின்வரும் தொலைபேசி இலக்கங்களினுாடாக சுகாதார பணியகத்துடன் தொடர்பு கொண்டு இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    2696677 > 2699332 > 2681311 > 2681309 − ePl;lk; 222
   
காணப்படும் புதிய வழிகாட்டல்களைப் பயன்படுத்தி உங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
தொலைநகல் இலக்கம் : 2675171 அல்லது எமது மின்னஞ்சல் முகவரியான fhbhelpline@gmail.com என்பதனை உங்களுக்கு பயன்படுத்த முடியும். தொலைநகல் ஊடாக கேள்விகளை அனுப்பும் போது “குடும்பக் திட்டமிடல் உதவியளிக்கும் சேவையின் கவனத்திற்கு” என்று குறிப்பிடவும்.